tamilnadu

img

உணவுப் பொருட்களின் விலைவாசி அதிகரிப்பு.... நாட்டின் தொழிற்துறை உற்பத்தி 6-ஆவது மாதமாக சரிவு!

புதுதில்லி:
2020 ஆகஸ்ட் மாதத்திற் கான தொழில்துறை உற்பத்திமதிப்பீடுகளை (Estimates of Index of Industrial Production - IIP) மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் திங்களன்று மாலை வெளியிட்டுள்ளது.

இதில், சுரங்கம், உற்பத்தி, மின்சாரம், உள்கட்டமைப்பு, கட்டுமானம் உள்ளிட்ட தொழிற் துறைகளின் உற்பத்தி, தொடர்ந்து 6-ஆவது மாதமாக சரிவைக் கண்டுள்ளது. குறிப் பாக, 2020 ஆகஸ்டில் 8.0 சதவிகிதம் அளவிற்கு வீழ்ச்சி கண்டுள்ளது. 2019 ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது, 2020 ஆகஸ் டில் சுரங்கத் தொழில் உற்பத்தி 9.8 சதவிகிதம், தயாரிப்புதொழில்கள் 8.6 சதவிகிதம், மின்சாரத் தொழில்துறை உற்பத்தி 1.8 சதவிகிதம், அத்தியாவசிய பொருட்கள் தொழில் துறை 11.1 சதவிகிதம், மூலதனப் பொருட்கள் உற்பத்தி 15.4 சதவிகிதம், நடுத்தர பொருட்கள் உற்பத்தி 6.8 சதவிகிதம் உள்கட்டமைப்பு மற் றும் கட்டுமானத் தொழில் 2.3 சதவிகிதம் என வீழ்ச்சி கண் டுள்ளன.

பணவீக்கம் அதிகரிப்பு
இதேபோல, நுகர்வோர் சில்லரை விலைப் பணவீக்கம்(Consumer Price Index - CPI) கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு, 2020 செப்டம்பரில் 7.34 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. நுகர்வோர் உணவு விலைப் பணவீக்கமும்(Consumer Food Price Index), கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு 2020 ஆகஸ்ட் மாதத்தில் 6.69 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.தானியங்கள் (4.68%), மீன் இறைச்சி (17.60%), முட்டை (15.47%), பால் (5.64%), எண்ணெய் & கொழுப்புகள் (13.44%), பழங்கள் (3.21%), காய்கறிகள் (20.73%), பருப்புவகைகள் (14.67%), சர்க்கரை(2.47%), மசாலா பொருட்கள் (11.73%), எரிபொருள் (2.87%)என 2020 செப்டம்பரில் விலைவாசியும் அதிகரித்துள்ளது.